ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியில் இருந்து 28,000 கன அடியாக அதிகரிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 13,000 கன அடியில் இருந்து 28,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 34வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி மீண்டும் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்ததால் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 21,500 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 16,000 கன அடியில் இருந்து 21,500 கன அடியாக அதிகரிக்கப்படுகிறது.

 

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை: அமுல் நிறுவனம் விளக்கம்!