ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆழத்தில் இருக்கும் முதலைகள் மேலே தென்படுவதால் பரபரப்பு

தருமபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தொடர்ந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து, கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 65,000 கன அடியிலிருந்து இன்று வினாடிக்கு 55,000 கன அடியாக தண்ணீர் வரத்து உள்ளது.

தண்ணீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஐந்தருவி மெயின் அருவி சினி பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. அதேபோல் மெயில் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 2 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் யாரும் உள்ளே செல்லாதவாறு நுழைவு வாயில் கயிறு கட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து 6 வது நாளாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் நீர்வீழ்ச்சி மற்றும் ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் மாவட்ட ஆட்சியர் சாந்தி தடை விதித்துள்ளார்.

இந்நிலையில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஊட்டமலை ராசி மணல் உள்ளிட்ட பகுதிகளில் ஆழமான பகுதிகளில் உள்ள முதலைகள் தற்பொழுது மேற்பகுதிக்கு வந்து உலாவுவதால் தொகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதிகளில் தொடர்ந்து நோன்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு