ஹாக்கி காலிறுதியில் இன்று கிரேட் பிரிட்டன் சவாலை முறியடிக்குமா இந்தியா

பாரிஸ்: ஒலிம்பிக் ஆண்கள் ஹாங்கியில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில், காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன.ஏ பிரிவில் முதல் 4 இடங்களை பிடித்த ஜெர்மனி (12 புள்ளி), நெதர்லாந்து (10), கிரேட் பிரிட்டன் (8), ஸ்பெயின் (7) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின.கடைசி 2 இடங்களை பிடித்த தென் ஆப்ரிக்கா (4), பிரான்ஸ் (1) ஏமாற்றத்துடன் வெளியேறின.பி பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம் (13 புள்ளி), இந்தியா (10), ஆஸ்திரேலியா (9), அர்ஜென்டினா (8) காலிறுதிக்குள் நுழைந்த நிலையில், அயர்லாந்து (3), நியூசிலாந்து (0) வாய்ப்பை இழந்தன. இந்நிலையில் காலிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ளன. இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்கும் முதல் காலிறுதியில் இந்தியா – கிரேட் பிரிட்டன் அணிகள் மோதுகின்றன.

கேப்டன் ஹர்மன்பிரீத், அபிஷேக், விவேக் பிரசாத், மன்தீப், ரோஹிதாஸ், குஜ்ரந்த், முன்னாள் கேப்டன் மன்பிரீத் ஆகியோர் இந்திய அணிக்காக அதிரடியாக விளையாடி வருகின்றனர். அதிலும் ஹர்மன்பிரீத் இதுவரை 6 கோல் அடித்து அசத்தியுள்ளார்.அதே சமயம் கேப்டன் அமேஸ் டேவிட் தலைமையிலான கிரேட் பிரிட்டனும் போராடி காலிறுதியை பிடித்திருக்கிறது. அணியை கரை சேர்ப்பதில் ஃபர்லாங் கேரத், அமேஸ் டேவிட், பார்க் நிகோலஸ், ரூபர்ட் சிப்பர்லே, மார்டன் லீ, குட்ஃபீல்டு ஆகியோர் தொடர்ந்து அதிரடி காட்டி வருவது அணிக்கு பலம்.பதக்கம் வெல்ல மட்டுமல்ல, பதக்க வாய்ப்பை தக்கவைக்கவும் காலிறுதியில் வென்று அரையிறுதிக்குள் நுழைய வேண்டியது அவசியம்.
அதை 2 அணிகளும் உணர்ந்திருப்பதால் ஆட்டம் சூடு கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை.

ஒலிம்பிக் தங்கம் வெல்ல ஜோகோவிச்சுக்கு கடைசி வாய்ப்பு; : அல்கராஸுடன் இன்று மோதல்

ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் செர்பியாவின் அனுபவ வீரர் நோவாக் ஜோகோவிச் (37 வயது), ஸ்பெயினின் இளம் நட்சத்திரம் கார்லோஸ் அல்கராஸ் (21 வயது) இன்று மோதுகின்றனர். 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று ஈடு இணையற்ற சாதனையாளராக முத்திரை பதித்துள்ள ஜோகோவிச்சுக்கு, ஒலிம்பிக்கில் தங்கம் என்ற சாதனை மட்டும் வாய்க்கு எட்டாமல் போக்கு காட்டி வருகிறது. இதற்கு முன் பங்கேற்ற 4 ஒலிம்பிக் போட்டிகளில் அவர் ஒரு வெண்கலப் பதக்கம் மட்டுமே வென்றுள்ளார். மூன்று அரையிறுதியில் ரபேல் நடால் (ஸ்பெயின்), ஆண்டி மர்ரே (இங்கிலாந்து), அலெக்சாண்டர் ஸ்வெரவிடம் (ஜெர்மனி) தோற்றது ஜோகோவிச்சின் டென்னிஸ் வாழ்க்கையில் சோக வரலாறாக பதிவாகி உள்ளது. இன்றைய பைனலில் ஜோகோவிச்சுடன் மோதவுள்ள கார்லோஸ் அல்கராஸ் நல்ல பார்மில் உள்ளார். சமீபத்தில் நடந்த விம்பிள்டன் பைனலில் அவர் ஜோகோவிச்சை எளிதாக வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜோகோவிச் – அல்கராஸ் மோதும் இன்றைய பைனலை டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

உலக சாதனையுடன் தகுதி;

ஒலிம்பிக் தடகளம் 4X400 மீட்டர் கலப்பு குழு தொடர் ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் பங்கேற்ற அமெரிக்க அணி 3 நிமிடம், 7.41 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து புதிய உலக சாதனையுடன் பைனலுக்கு தகுதி பெற்றது. கடந்த ஆண்டு நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப்பில் படைக்கப்பட்ட சாதனையை (3:08.80) உடைத்து நொறுக்கிய மகிழ்ச்சியில் அமெரிக்காவின் வெர்னான் நார்வுட், ஷாமியர் லிட்டில், பிரைஸ் டெட்மன், கேலின் பிரவுன்.

Related posts

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட 22 மீனவர்களை மீட்க கோரி தூத்துக்குடியில் உண்ணாவிரதம்

அமலாக்கத்துறை சம்மனுக்கு எதிராக மம்தாவின் மருமகன் தொடர்ந்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 4 சென்னை இளைஞர்களின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு: ஒருவரின் சடலத்தை தேடும் பணி தீவிரம்