இந்துத்துவா அரசியலுக்கு என்ட் கார்டு போட்ட மக்கள் உ.பி.யில் மக்களவை தேர்தல் வெறும் டிரெய்லர் தான்: மெயின் படம் 2027 சட்டப்பேரவை தேர்தலில் ரிலீஸ்

இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பியில் மொத்தம் 80 தொகுதிகள். இங்கு கடந்த 2014ல் 71 தொகுதிகளையும், 2019ல் 62 இடங்களையும் பாஜ கைப்பற்றியது. இந்த முறை இந்தியா கூட்டணி 43 தொகுதிகளை கைப்பற்றினர். மீதமுள்ளது தான் பாஜ கூட்டணிக்கு. அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்த பாஜவுக்கு, அயோத்தி கோயில் உள்ள எம்.பி தொகுதியிலேயே தோல்வி கிடைத்தது பன்மடங்கு அதிர்ச்சியை பாஜ தலைமைக்கு அளித்துள்ளது. இந்த தேர்தல் முடிவு, இந்துத்துவா அரசியலுக்கு முடிவு காலம் நெருங்கிவிட்டதை காண்பிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிததுள்ளது. உத்தரபிரதேசம் பாஜவுக்கு டிரெய்லரைக் காட்டியுள்ளது, 2027ல் சட்டப்பேரவை தேர்தலின்போது மெயின் படம் வெளியாகும். அது இன்னும் பயங்கரமாக இருக்கும் என்று அவர்கள் பாஜவை எச்சரித்துள்ளனர்.

பாஜவின் இந்த தோல்விக்கான காரணங்களை அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
அது வருமாறு:
* உ.பியின் கள நிலவரத்தை அடிப்படை யதார்த்தத்தை பாஜ தலைமை புரிந்து கொள்ளவில்லை.
* யோகி ஆதித்யநாத் ஆட்சியில் திமிர்பிடித்த அதிகாரவர்க்கம், தன்னிச்சையாக செயல்படும் காவல்துறையும் இணைந்து பொதுமக்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் மூடி மறைக்க முயன்றன.
* யோகி ஆதித்யநாத்தின் இமேஜைக் காப்பாற்ற, அப்பாவிகளை அதிகாரவர்க்கம் துன்புறுத்தியது.
* லாக்அப் மரணங்கள், நீதிமன்றங்களுக்குள் நடக்கும் கொலைகள், சிறைச்சாலைகளுக்குள் நடக்கும் கொலைகள் போன்ற பல சம்பவங்களால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
* சமூக ஊடகங்களில் குரல் எழுப்பியதற்காக சாமானிய மக்கள் எதிரிகளைப் போல நடத்தப்பட்டனர், வாடகைக்கு அமர்த்தப்பட்ட ஆயுதப் படையால் தாக்கப்பட்டனர்.
* இது போதாதென்று மோடி மீண்டும் பிரதமரானால், ஆத்தியநாத்தின் முதல்வர் பதவி பறிக்கப்படும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரம், முதல்வரின் ஆதரவாளர்களையே பாஜவுக்கு எதிராக திரும்பியது.

* ஓபிசி, தலித், சிறுபான்மையினரின் வெற்றி: அகிலேஷ் யாதவ் கருத்து
சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், பிற்படுத்தப்பட்ட, தலித், சிறுபான்மை, பழங்குடியினர் தான் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு காரணம். இம்முறை மக்கள் வெற்றி பெற்றுள்ளனர், ஆட்சியாளர்கள் அல்ல. பொதுமக்கள் வெற்றி பெறட்டும். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாங்கள் முழு பொறுப்புடன் காப்பாற்றுவோம், அதை நிறைவேற்றுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

திமுக பவளவிழா பொதுக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்துரை

புகையிலை பொருட்களை சப்ளை செய்த வடமாநில வாலிபர் கைது

ரூ.200 கோடிக்கு இரிடியம் விற்கலாம் என கூறி ரூ.65 லட்சம் மோசடி; கோவை வாலிபரை கூலிப்படை ஏவி கொன்ற ஐஸ் கம்பெனி அதிபர் கைது