ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன்

கர்நாடகா, பெங்களூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் 182 டெக்னீசியன், ஆபரேட்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. Diploma Technician (Mechanical): 29 இடங்கள் (பொது-14, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1)
2. Diploma Technician (Electrical/Electronics/Instrumentation): 17 இடங்கள் (பொது-10, ஒபிசி-4, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-2)
3. Operator (Fitter): 105 இடங்கள் (பொது-44, ஒபிசி-27, எஸ்சி-16, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்-11).
4. Operator (Electrician): 26 இடங்கள் (பொது-10, ஒபிசி-6, எஸ்சி-5, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-2).
5. Operator (Machinist): 2 இடங்கள் (ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்- 1).
6. Operator (Welder): 1 இடம் (பொது).
7. Operator (Sheet Metal Worker): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1).

தகுதி: 1. டிப்ளமோ டெக்னீசியன் பணிக்கு மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ்/ கம்யூனிகேசன்/இன்ஸ்ட்ருமென்டேசன்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஏதாவதொரு பொறியியல் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.23,000-46,511. வயது: 28க்குள்.

2. ஆபரேட்டர் பணிக்கு பிட்டர்/எலக்ட்ரீசியன்/மிஷினிஸ்ட்/வெல்டர்/ ஷீட் மெட்டல் வொர்க்கர் ஆகிய ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்ஏசி/என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது 01.05.2024 தேதியின்படி கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வு ஹெச்ஏஎல் மையத்தில் நடைபெறும்.

www.hal-india.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (12.06.2024).

Related posts

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

காட்டு மாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு

பொன்னேரி அருகே சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு