இந்து மதம் சிறக்க பாடுபட்டவர்!: பங்காரு அடிகளார் மறைவு ஆன்மீக உணர்வாளர்களுக்கு பேரிழப்பு.. ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல்..!!

சென்னை: பங்காரு அடிகளார் மறைவு ஆன்மீகஉணர்வு கொண்டோருக்கு பேரிழப்பு என ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். சாரை சாரையாய் திரண்டு வந்து பங்காரு அடிகளாருக்கு பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசு மரியாதையுடன் இன்று மாலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. அமர்ந்த நிலையில் பங்காரு அடிகளாரின் உடலை நல்லடக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, பங்காரு அடிகளார் உடலுக்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின், சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், மகத்தான மகான்களுல் ஒருவர் பங்காரு அடிகளார். இந்து மதம் சிறக்க பாடுபட்டவர்.

செவ்வாடை சித்தர் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார். ஆன்மீகம் மட்டுமின்றி பல கல்வி நிறுவனங்களை நிறுவி ஏழைகளுக்கு கல்வி கொடுத்தவர். தமிழ் சமுதாயம் கண்டெடுத்த ஆன்மிக செம்மல் பங்காரு அடிகளார். பங்காரு அடிகளாரின் மறைவு உலகம் முழுவதும் உள்ள ஆன்மீக உணர்வாளர்களுக்கு பேரிழப்பு என்று தெரிவித்தார். மேலும் பங்காரு அடிகளார் மிகச்சிறந்த ஆன்மீகவாதி என்றும் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார்.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்