தமிழ்நாட்டில் ஒருபோதும் இந்தியை திணிப்பதில்லை: ஒன்றிய இணை அமைச்சர் பேட்டி

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று நடைபெற்ற பாஜ உறுப்பினர் சேர்க்கை முகாமை ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் துவக்கி வைத்து, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்அளித்த பேட்டி:
தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு பணிகள் நடைபெற்று வருகிறது. பாஜ எந்த இடத்திலும் இந்தியை திணிப்பதில்லை. புதிய கல்வி கொள்கை ஆரம்பக்கல்வியை தாய்மொழி தமிழில் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். தற்போதைய, காலகட்டத்தில் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மட்டுமே கூறி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். திருப்பூரில் நிருபர்களை சந்தித்த எல்.முருகனிடம், நடிகர் விஜயின் அரசியல் கட்சி குறித்து கேள்வி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஆனால் மக்கள் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதில்தான் உள்ளது’’ என்றார். விஜயின் தமிழக வெற்றி கழகத்துடன் பாஜ கூட்டணி அமைக்குமா? என்ற கேள்விக்கு ‘‘பாஜ தேசிய தலைமைதான் முடிவு செய்யும்’’ என்று தெரிவித்தார்.

 

Related posts

நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது!