இமாச்சல் மாநிலம் திவாலானது: காங்கிரஸ் அரசு மீது கங்கனா காட்டம்

மண்டி: இமாச்சல் மாநிலம் திவாலாகி விட்டதாக கூறியுள்ள கங்கனா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இமாச்சல் பிரதேசம் மண்டி ெதாகுதி எம்பியும், பாலியுட் நடிகையுமான கங்கனா வெளியிட்ட பதிவில், ‘இமாச்சல பிரதேச காங்கிரஸ் அரசு வாங்கிய கடன்கள் யாவும் சோனியா காந்தியின் குடும்பத்துக்கு சென்றது. இதனால் மாநிலமே திவாலாகி உள்ளது.

கடைசியாக, வெள்ள நிவாரணத்தில் ஒதுக்கப்பட்ட பணத்தில் ெபரும் ஊழல் நடந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் செய்த ஊழலால், மாநிலம் பல ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உள்ளது. அதனால் இமாச்சல் மக்கள் காங்கிரசுக்கு எதிராக போராட வேண்டும். முதல்வர், அமைச்சர்கள், மாநகராட்சி தலைவர் ஆகியோருக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் கூட வழங்கப்படவில்லை’ என்று கூறியுள்ளார்.

Related posts

1,000 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நவீன இயன்முறை உபகரணம் வழங்கும் திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்துகள் பாதுகாப்பாக உள்ளதா?: பவன் கல்யாண் கேள்வி!!

தமிழக மீனவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராமல் உரிய நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ளும் என விழைகின்றோம்: இலங்கை புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு சிபிஎம் வாழ்த்து