இமாச்சல் பிரதேசத்தில் சீட்டு கட்டுகளை போன்று சரிந்த அடுக்குமாடி: அதிர்ஷ்டவசமாக மக்கள் உயிர் தப்பினர்

சிம்லா: இமாச்சல் பிரதேசத்தில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லா அடுத்த தாமி என்ற பகுதியில், அம்மாநில அரசுக்கு சொந்தமான பட்டயக் கல்லூரி செல்லும் சாலையின் ஓரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இருந்தது. அந்த கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதால், கட்டிடத்தில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனிடையே கட்டிடத்தின் முன்பகுதியானது மெதுவாக சரிந்தது.

அதன்பின் முழு கட்டிடமும் சீட்டு கட்டுகளை போன்று சரிந்தது. இதனால் சாலையில் கடும் புழுதி ஏற்பட்டது. அப்பகுதியில் முற்றிலும் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலைப்பாங்கான பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளே, இதுபோன்ற கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு காரணம் என்று அம்மாநில அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த கட்டிடம் இடிந்து விழும் வீடியோ காட்சிகளும், புழுதி படிந்த பகுதியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Related posts

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு