இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் அதிரடி..!!

இமாச்சலப்பிரதேசம்: இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மூத்த வழக்கறிஞரும், மூத்த தலைவருமான அபிஷேக் மனுசிங்வினுடைய காங்கிரஸ் கட்சியினர் அங்கு வேட்பாளராக இருந்தனர். மொத்தம் 68 எம்.எல்.ஏக்கள் கொண்ட சட்டசபையில் காங்கிரசுக்கு 40 எம்.எல்.ஏக்களும் பாஜவிற்கு 25 எம்.எல்.ஏக்களும், 3 சுயேச்சை எம்.எல்.ஏக்களும் இருந்து வருகின்றனர். இந்த மாநிலங்களவை தேர்தலில் பாஜக காங்கிரசின் 6 எம்.எல்.ஏக்களையும், 3 சுயேச்சை எம்.எல்.ஏக்களையும் கட்சி மாறி வாக்களிக்க வைத்து பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்தனர். நேற்றைய தினம் இமாச்சல் பிரதேச சட்டசபையில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

நிதி மசோதா வெற்றி பெறவில்லை என்றால் ஆளும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தது காங்கிரஸ் கட்சிக்கிடையே நெருக்கடியை ஏற்படுத்தியது. நேற்றைய தினம் இந்த 6 எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்கு வரவில்லை.அனைத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்திற்கு வரவேண்டும். நிதி மசோதா மீது அரசுக்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும் என விப் வெளியிட்டனர். ஆனால் இந்த 6 எம்.எல்.ஏக்கள் பாஜக வசம் அரியானாவில் இருந்ததால் சட்டசபைக்கு வரவில்லை. இதனை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சியானது 6 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஒரு மனுவை இமாச்சலப்பிரதேச சபாநாயகர் முன்பு கொடுத்திருந்தனர். அதனை விசாரித்த சபாநாயகர் தற்போது 6 எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி 2 சுற்றுகளில் இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டது. மாநிலங்களவை தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்தது ஒன்று, இரண்டாவது சட்டசபையில் நிதி மசோதா மீதான வாக்கெடுப்பில் சட்டசபைக்கு வரவில்லை என்ற 2 காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியிருந்தது. ஆனால், முதல் சுற்றில் அவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் மறுத்துவிட்டார். இரண்டாவது சுற்றில் நிதி மசோதா மீது அரசுக்கு சார்பாக வாக்களிக்கவில்லை, சட்டசபைக்கு வரவில்லை என்ற காங்கிரஸ் கட்சியின் விதியை மீறிய காரணத்தினால் இந்த 6 எம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் தற்போது தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த 6 எம்.எல்.ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ததால் அதிக பெரும்பான்மையும் குறைந்துள்ளது. எனவே தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையை விட அதிகமாக இரண்டு எம்.எல்.ஏக்கள் வைத்திருப்பதால் தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியானது இமாச்சலப்பிரதேசத்தில் நீடித்து வருகிறது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி