நெடுஞ்சாலைத்துறையில், பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாற்றம், பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறையில், பணிபுரியும் பணியாளர்களுக்கு பணி மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார்கள்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று (8.2.2024), நெடுஞ்சாலைத்துறையில், சென்னை மற்றும் விழுப்புரம் வட்டத்தில் பணிபுரியும் 14 சாலைப் பணியாளர்களை, அலுவலக உதவியாளராகப் பணிமாற்றம் (Transfer of Service) வழங்கி, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் மற்றும் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு பணியமர்த்திட, 14 அலுவலக உதவியாளர்களுக்கு பணி மாற்றம் ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

மேலும், நீண்ட நாள் கோரிக்கையான ஊட்டுப்பதவியிலிருந்து(Feeder Category) இளநிலை பொறியாளர் பதவி தற்போது, தகுதி வாய்ந்த வரைவு அலுவலர்(Drafting Officer), இளநிலை வரைத்தொழில் அலுவலர்(Junior Drafting Officer), திறன்மிகு உதவியாளர் நிலை-1 (Skilled Assistant Grade-I) ஆகிய 34 நபர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளையும் மற்றும் ஊட்டுப் பதவியிலிருந்து இளநிலை வரைத்தொழில் அலுவலர் பதவிக்கு தகுதி வாய்ந்த உதவி வரைவாளர்(Assistant Draftman) மற்றும் திறன்மிகு உதவியாளர் நிலை-1(Skilled Assistant Grade-I) ஆகிய 90 நபர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் அவர்கள் வழங்கி, அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் ந.சாந்தி, நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் கட்டுமானம் & பராமரிப்பு இரா.சந்திரசேகர் மற்றும் இணை இயக்குநர்(நிர்வாகம்) ஆர்.விமலா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!