ஹைவே வெதர்!

கொரோனாவிற்கு பின்னர் கார் வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாகவே உயர்ந்துள்ளது. என்கையில் கார் பயணம் விரும்புவோர் எண்ணிக்கையும் கூடிவிட்டது. கார் , பைக் உட்பட சொந்தமாக அல்லது குடும்பமாக, தனியாக பயணிக்கும் மக்களை மனதில் கொண்டே ’ஹைவே வெதர்’ (Highway Weather) என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு நீங்கள் சென்னை- பாண்டிச்சேரி பயணிக்கிறீர்கள் எனக் கொள்வோம். இந்தச் செயலியில் உங்கள் சென்னை லோகேஷனிலிருந்து பாண்டிச்சேரி எனக் கொடுத்தால் இடையில் ஓய்வெடுக்கத் தகுந்த ஹோட்டல்கள், உணவகங்கள், சாலையோர சிசிடிவி கேமராக்கள், டோல்கள், குறிப்பாக ஆரம்பிக்கும் இடம் முதல் போய் சேரும் வரையிலான காலநிலை, எப்படி உள்ளது, அல்லது எப்படி இருக்கும் என அனைத்தும் கொடுக்கிறது இந்த ஹைவே வெதர் செயலி. ஒருவேளை சேருமிடத்தில் அதீத மழை அல்லது பனிப்பொழிவு உள்ளது எனில் முன்பே அதற்கான பயண திட்டமிடல்களை செய்துகொள்ள ஏதுவான டிப்ஸ்களையும் இந்தச் செயலிக் கொடுக்கிறது. குடும்பமாக குழந்தைகள், வயதானவர்கள் சகிதமாக கிளம்புவோருக்கு இந்த மொபைல் செயலி அருமையான ஒன்று.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்