நெடுஞ்சாலைத் துறையில் இன்ஜினியர்

இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் காலியாக உள்ள இன்ஜினியர் பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1Engineer (ITS): 30 இடங்கள் (பொது-14, எஸ்சி-4, ஒபிசி-8, பொருளாதார பிற்பட்டோர்-2). வயது: 21 லிருந்து 30க்குள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. தகுதி: தகவல் தொழில்நுட்பம்/ கம்ப்யூட்டர் சயின்ஸ்/ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரிக்கல் இன்ஸ்ட்ருமென்டேசன்/ டேட்டா சயின்ஸ் மற்றும் ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2022க்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

2Officer (Finance): 1 இடம். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. வயது: 30க்குள். தகுதி: சிஏ/ஐசிஏஐ/சிஎம்ஏ/ஐசிஎம்ஏஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2022,2023,2024ம் ஆண்டுகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் கேட் தேர்வு தேர்ச்சி/சிஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2022க்கு பின்னர் படிப்பை முடித்திருக்க வேண்டும். http://www.ihmcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.08.2024.

Related posts

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்

மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்