முக்கிய உயர் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு: ஊரக வளர்ச்சித்துறை செயலராக ககன்தீப் சிங் பேடி நியமனம்

சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய உயர் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வனத்துறை செயலராக உள்ள சுப்ரியா சாஹூ சுகாரத்துறை செயலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;

* வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, மருத்துவத்துறைக்கு மாற்றம்

* மருத்துவத்துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம்

* ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார், வனத்துறைக்கு மாற்றம்

* நீர்வளத்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத்துறை செயலாளராக நியமனம்

* நீர்வளத்துறை செயலாளராக மணிவாசனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு

* சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ஜான் லூயிஸ் நியமனம்

* சுற்றுலா, கலாச்சாரத்துறை முதன்மைச் செயலாளராக சந்திர மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்

* பொதுப்பணித்துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்

* உயர்கல்வித்துறை செயலராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமனம்

* தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக ஆர்.வைத்திநாதன் நியமனம்

* தமிழ்நாடு உப்புக் கழக மேலாண் இயக்குநராக சி.என்.மகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்

* தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக எம்.சாய்குமார் நியமனம்

* நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை செயலாளராக ஆர்.செல்வராஜ் நியமனம்

* ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.எஸ். ஜவகருக்கு கூடுதல் பொறுப்பாக சமூக சீர்திருத்தங்கள் துறை ஒதுக்கீடு

Related posts

மக்கள்கூடும் ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு, விதிமுறைகளை விதிக்க வேண்டும் : மாநிலங்களவையில் கார்கே பேச்சு

கன்னியாகுமரி கோதயாறு அருகே யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: பொதுமக்கள் அச்சம்

உத்தரபிரதேசத்தில் கூட்ட நெரிசலில் 121 பேர் இறந்த நிலையில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்திய சாமியார் தலைமறைவு