எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 12 மரக்கன்றுகள் நட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவதிலும் மரங்களை இடம்மாற்றி வைப்பதிலும் குறைபாடு இருந்தால் நீதிமன்றத்தை நாட பசுமை தாயகம் அமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் அனுமதியுடன்தான் மரங்கள் வெட்டப்படுகின்றன, நிபந்தனைகள் பின்பற்றப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Related posts

மீண்டும் ஒரு கேலிக்கூத்து

தமிழ்நாட்டில் 4 விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரிப்பு

தினம், தினம் புதிய உச்சம் கண்ட நிலையில் தங்கம் விலை சற்று குறைந்தது