அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்புவுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் இறையன்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. குற்ற வழக்குகளில் திறமையாக புலன் விசாரணை செய்வது குறித்த, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் முகமது ஜின்னா தலைமையில் அண்மையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனையின்போது அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்க இறையன்பு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, வழக்கறிஞர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிலையில், 11 தாலுகாக்களில் சிறப்பு புலன் விசாரணை பிரிவுகள் அமைத்து தீவிர குற்ற வழக்குகள் குறித்த இறுதி அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தாக்கல் செய்தார். அப்போது, அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கிய தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளருக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்வதாக ஐகோர்ட் பாராட்டியது.

டிஜிட்டல் ஆதாரங்கள் விதிகள் வகுக்கும் நடைமுறை இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் அரசு தரப்பு விளக்கமளித்தது. பின்னர், புலன் விசாரணையின்போது தரத்தை மேம்படுத்துவது குறித்த வழக்கு ஜூலை 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

முதல் டி20ல் தென் ஆப்ரிக்கா வெற்றி

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு