அதிக வட்டி தருவதாக ரூ.41 கோடி மோசடி தொழிலதிபர் கைது

நாமக்கல்: பொதுமக்களிடம் முதலீடு பெற்று ரூ.41 கோடி மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (80). இவரது உறவினர்கள் செல்லம்மை, அருணாச்சலம்(எ) ராமு, சுவர்ணமாலா, காந்திமதி, வள்ளியம்மை. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து, திருச்செங்கோடு கச்சேரி தெருவில், பல ஆண்டுகளாக நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்தனர். இவர்களது நிதி நிறுவனத்தில், அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் முதலீடு பெற்றுள்ளனர். இவர்களிடம் பணம் முதலீடு செய்து ஏமாந்த 91 பேர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பொதுமக்களிடம் இருந்த மொத்தம் ரூ.40 கோடியே 93 லட்சத்து 86 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து சோமசுமத்தரம் தலைமறைவானார். அவரை நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சோமசுந்தரத்தை நேற்று போலீசார் கைது செய்து, சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர், கோவை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, சோமசுந்தரத்தை அழைத்துச் சென்றனர்.

Related posts

காவிரியில் உரிய நீரை பெற உடனடி நடவடிக்கை தேவை: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

முகம் அழகு கொடுக்கும் முட்டைக்கோஸ்!