மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.54,000-ஐ தாண்டியது. தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்து கடந்த மே 20ம் தேதி ஒரு பவுன் ரூ.55,200க்கு விற்கப்பட்டது. இது வரலாற்றில் அதிகபட்ச விலையாகும். அதன் பிறகு குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது. ஜூலை மாதம் தொடங்கிய போதே நகை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாட்களில் சற்று உயர்ந்து விற்பனையானது. நேற்று ஜூலை 3ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 உயர்ந்து ரூ..97.50க்கு விற்பனையாகிறது. இதே போன்று 18 காரட் தங்கம் விலையும் சவரனுக்கு ரூ.424 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலையேற்றம் நகை வாங்குவோரை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

 

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது