உயர் பதவிக்கான நேரடி நியமனம் ரத்து.. அரசியல் சாசனம் வென்றது; இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம்: ராகுல் காந்தி, கார்கே வரவேற்பு!!

டெல்லி: ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் 45 இணைச் செயலாளர்கள் பணியிடங்களை தனியார் மூலம் நிரப்ப விளம்பரம் வெளியிடப்பட்டது. யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் பணிகளில் நியமிக்கப்பட்டதால் எதிர்ப்பு எழுந்தது. ஒன்றிய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆர்ஜேடி உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனிடையே நேரடி நியமன நடைமுறை விளம்பரத்தை ரத்து செய்ய யுபிஎஸ்சி தலைவர் பிரீத்தி சூடனுக்கு ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியிருந்த நிலையில், சமூக நிதியை காக்கும் நடவடிக்கையாக நேரடி நியமன நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஒன்றிய அரசின் பணிகளுக்கு நேரடி நியமனம் என்ற அறிவிப்பு ரத்துக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு அளித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் கூறியதாவது;

இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம்: ராகுல் காந்தி

என்ன விலை கொடுத்ததாவது அரசியல் சாசனம் மற்றும் இடஒதுக்கீடு முறையை பாதுகாப்போம்.

உயர் பதவிகளில் நேரடி நியமனம் (‘லேட்டரல் என்ட்ரி’) போன்ற பாஜகவின் சதிகளை எப்படியும் முறியடிப்போம்.

மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் – 50% இடஒதுக்கீடு வரம்பை உடைத்து சாதிவாரி கணக்கின் அடிப்படையில் சமூக நீதியை நிலை நாட்டுவோம் என்று ராகுல் கூறியுள்ளார்.

அரசியல் சாசனம் வென்றது: மல்லிகார்ஜுன கார்கே

அரசியலமைப்பு வென்றது

லேட்டரல் என்ட்ரியில் இடஒதுக்கீடு இல்லாமல் பணியமர்த்த மோடி அரசு சதி செய்து கொண்டிருந்தது, ஆனால் இப்போது இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும்.

மீண்டும் மோடி அரசு அரசியல் சாசனத்தின் முன் தலைவணங்க வேண்டும்.

இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிரான முடிவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் இந்திய கூட்டணி வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது.

இதனால் மோடி அரசு இந்த முடிவை திரும்பப் பெற வேண்டியதாயிற்று.

இது பாபா சாகேப்பின் அரசியல் சாசனத்தின் வெற்றி. இது ஒவ்வொரு தலித், சுரண்டப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வெற்றி. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சொல்லிட்டாங்க…

மலராத கட்சியில் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் காமெடிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!