ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்பு ஹெராயின் போதை பொருள் பறிமுதல்

*ஜாம்பியாவை சேர்ந்த பெண் கைது

திருமலை : தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் ரூ.41 கோடி மதிப்புள்ள 5.92 கிலோ ஹெராயின் போதை பொருளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், ஜாம்பியாவை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஷம்ஷாபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் விமானத்தில் இருந்து வரும் பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர். அப்போது வெளிநாட்டு பெண் பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஹெராயின் போதை பவுடர் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

உடனே சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணை கைது செய்து, ரூ.41 கோடி மதிப்புள்ள 5.92 கிலோ ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பயணியிடம் விசாரணை நடத்தியதில் ஜாம்பியாவைச் சேர்ந்த லுசாகா என்பது தெரியவந்தது. இந்த போதை பவுடர் எங்கிருந்து யார் மூலம் கொண்டு வரப்பட்டது. ஐதராபாத்தில் யாருக்கு கொடுக்க இருந்தார் போன்ற விவரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related posts

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி