ஹீரோ ஸ்பிளண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் நிறுனம், ஸ்பிளண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 என்ற பைக்கை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பிளண்டர் பைக்கில் லேட்டஸ்ட் வரவான இதில், இன்ஜின் திறனில் மாற்றம் எதுவும் இல்லை. 100 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 7.09 பிஎச்பி பவரையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், டிரம் பிரேக்குகள், யுஎஸ்பி சார்ஜர், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி, எல்இடி ஹெட்லைட் இடம் பெற்றுள்ளது. தொழில்நுட்ப அளவில் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ள இதன் ஷோரூம் விலை ரூ.82,911 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள ஸ்பிளண்டரை விட ரூ.3,000 அதிகம்.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு