ஹீரோ பிளஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது பிளஷர் பிளஸ் ஸ்கூட்டரின் புதிய வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்டெக் ஸ்போர்ட் என பெயரிடப்பட்டுளள் இந்த ஸ்கூட்டரின் ஷோரூம் விலை சுமார் ரூ.79,738 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெயருக்கேற்ப ஆரஞ்ச் மற்றும் நீல வண்ணத்தில் புதிய கிராபிக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 110.9 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும் 8.7 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்வர்கள் டம் பெற்றுள்ளன. டிவிஎஸ் ஜூபிடர் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு