ஹீரோ மோட்டார் சைக்கிள்

ஹீரோ மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் பைக்குகள் விலை நாளை முதல் உயர்கிறது. அதிகபட்சம் ரூ.1,500 வரை விலை உயர்வு இருக்கும் எனவும், பைக் மாடலுக்கு ஏற்ப இது வேறுபடும் எனவும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.டூவீலர்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு காரணமாக, பைக், ஸ்கூட்டர்களின் விற்பனை விலை உயர்த்துவது தவிர்க்க முடியாதது ஆகி விட்டது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகில் அதிக டூவீலர்கள் தயாரிக்கும் நிறுவனமாக ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன் திகழ்கிறது. இருப்பினும் இந்த நிறுவனத்தின் டூவீலர்கள் விற்பனை கடந்த மே மாதத்தில் முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் சரிந்து 4,79,450 ஆக இருந்தது. எனினும், ஏற்றுமதி 11,165 டூவீலர்களில் இருந்து 11,165 டூவீலர்களாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவன தயாரிப்புகளில் ஸ்பிளண்டர், பேஷன், கிளாமர் ஆகிய பைக்குகள் அதிகம் விற்பனையாகும் மாடல்களாக உள்ளன.

Related posts

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

வருமான வரித்துறை அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்!