வீட்டைக் குளிர்விக்கும் குட்டிச் செடிகள்!

வெளியே மழை பெய்தாலும், வெயிலே இல்லை என்றாலும் நமது வீடுகளுக்குள் வெப்பமான சூழல் இருப்பதைத் தவிர்க்க இயலவில்லை. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் மின்சார சாதனங்களும் ஒரு வித காரணம்தான். உதாரணமாக ஏசி அறையில் ஏசி பயன்படுத்தாத நேரம் போக மற்ற நேரத்தில் வீட்டில் மற்ற பகுதிகளை விட அந்த அறையில் வெப்பம் அதிகமாக இருப்பதை உணர்வீர்கள். காரணம் ஏசி அறையின் இயல்பான குளிர்ச்சித் தன்மையையும் அகற்றிதான் குளுமையாக்கும். அது போலதான் மின்விசிறி, மின்சார விளக்குகள், என அனைத்துமே வெப்பத்தை வெளியிடும் கருவிகள்தான். இதற்குதான் சில செடிகள் இயற்கை குளிரூட்டியாக வீட்டுக்குள் குளுமையை ஏற்படுத்தும். இவற்றை மிகச் சரியாக பராமரித்தால் வீட்டில் குளிர்ச்சி, போதுமான ஆக்ஸிஜன் கிடைக்கும். இதோ சில வீட்டுக்குள் வளர்க்கக்கூடிய தாவரங்கள் மற்றும் அதன் பயன்கள்.

அரேக்கா பனைச்செடி
(Areca Palm Plant)

மிகவும் பிரபலமான வீட்டிலுள்ளே வளர்க்கப்படும் தாவரங்களில் சிறந்த ஒன்றாக இது உள்ளது. இந்த அலங்கார உட்புறத்தாவரம், இயற்கையாகவே ஈரப்பதம் கொடுக்க வல்லது. அதாவது உட்புறக் காற்றை ஈரப்பதமாக வைத்திருக்க இது உதவுகிறது.

பெர்ன்ஸ் (Ferns)

இயற்கையாகவே வீட்டைக் குளிர்விக்க பெர்ன்ஸ் செடியை பயன்படுத்தலாம். இது வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் காற்றில் ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் காற்றைச் சுத்திகரிக்கும் தாவரங்களில் சிறந்ததாகவும் விளங்குகின்றது.

பாம்புச்செடி (Snake Plant)

பெயர் கொஞ்சம் பயமுறுத்துவது போல இருந்தாலும், பாம்பின் தோற்றத்தை ஒத்து இருந்தாலும், வீடுகளில் வளர்க்கப்படும் மிகவும் பொதுவான சிறந்த தாவரங்களில் ஒன்றாக இந்தச் செடி உள்ளது. இது காற்றை தூய்மையாக்குவதுடன், ஆக்ஸிஜனின் அளவையும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக வீட்டில் இருக்கும் வெப்பநிலை வேகமாக குறைகிறது.

பேபி ரப்பர் தாவரம்
(Baby Rubber Plant)

இது வளிமண்டலத்தில் உள்ள கார்பன்டையாக்சைடை எளிதில் உறிஞ்சி ஆக்ஸிஜனின் அளவு அதிகரிக்க உதவுகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் அளவு தானாகவே குறையத் தொடங்குகிறது.

கோல்டன் பொத்தோஸ்
(Golden Pothos)

வீட்டுக்குள் காற்றை குளிர்விப்பதில் மிகவும் பயனுள்ள தாவரமாக கோல்டன் பொத்தோஸ் விளங்குகிறது. இது காற்றில் இருந்து தூசி மற்றும் கார்பனை விரைவாக வடிகட்டுகிறது.

கற்றாழை (Aloe vera Plant)

கற்றாழைச்செடியை வீட்டுக்குள் வைத்தால், அது உட்புறக் காற்றின் வெப்ப நிலையைக் குறைக்கும். கோடையில் சருமத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. கற்றாழை வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கவும் இதை பயன்படுத்தலாம். பொதுவாக வீட்டுக்குள் வைக்கப்படும் இந்த செடிகள், காற்றைச் சுத்தப்படுத்தி குளுமையை ஏற்படுத்துவதுடன், வீட்டுக்கு அழகான தோற்றத்தையும் தருகின்றன. வீட்டில் இருப்பவர்களுக்கும், வெளியில் இருந்து வருபவர்களுக்கும் மன அமைதியை ஏற்படுத்துகின்றன. எனவே தயங்காமல் இவற்றை வீட்டில் வளர்க்கலாம்.அதிகம் நீர் உறிஞ்சாத, கேக்டஸ், கற்றாழை, டேபிள் மூங்கில், குரோட்டன்ஸ் போன்ற தாவரங்களுக்கு இயற்கையாகவே அதிக ஆக்ஸிஜனை வெளியிடும் பண்பு உண்டு. எனவே இவற்றை வீட்டருகில் இருக்கும் நர்சரி கார்டன்களில் கூட வாங்கலாம்.
– அ.ப.ஜெயபால்

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை