ஹேமா கமிட்டி விவகாரம்; இழப்புகளை பற்றி நடிகைகள் பயப்படக்கூடாது: சன்னி லியோன், பிரபு தேவா ஆவேசம்


சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கை வெளியான பிறகு நடிகைகள் துணிச்சலாக தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் தொடர்பாக பேசி வருகிறார்கள். முன்னணி நடிகைகள் சிலர் கூட இந்த விவகாரம் தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை சன்னி லியோன், நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான பிரபு தேவா ஆகியோர் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது அங்கு பேசிய சன்னி லியோன், ‘‘பாலியல் சீண்டல்கள், பிரச்னைகள் எதுவாக இருந்தாலும் அதைக் கூற நடிகைகள் துணிச்சலாக முன் வரவேண்டும்.

இழப்புகளை கண்டு அஞ்சக்கூடாது. நோ என்றால் நோதான் அதில் எந்த சமரசத்துக்கும் இடம் தரக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லையை தீர்மானிப்பது நமது கையில்தான் இருக்கிறது. அந்த உரிமையை நாம் இழக்கக் கூடாது’’ என்றார். இது பற்றி பிரபுதேவா கூறும்போது, ‘‘நீண்ட காலமாகவே இது சினிமா உலகில் பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இதற்கு நியாயம் கிடைக்க வேண்டியது அவசியமாகிறது’’ என்றார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு