ஹெலிகாப்டர் திருட்டு: உ.பி.பாஜ அரசை சாடும் அகிலேஷ் யாதவ்


லக்னோ: கடந்த மே மாதம் தங்களது எஸ்ஏஆர் ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிக்காப்டர் பார்ட் பார்ட்டாக டிரக்கில் திருடி செல்லப்பட்டது. இதுகுறித்து பைலட் ரவீந்திர் சிங், போலீசில் அளித்த புகாரில், ‘என்னை சில மர்ம நபர்கள் தாக்கி விட்டு ஹெலிகாப்டரை திருடி சென்று விட்டனர்’ என்று கூறியிருந்தார். ஹெலிகாப்டரே திருடுபோனதாக போலீசில் புகார் செய்யப்பட்டது இணையத்திலும் பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து அம்மாநில பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவரும் எம்.பியுமான அகிலேஷ் யாதவ் பாஜ அரசை விமர்சித்திருந்தார்.

அவர் தனது, எக்ஸ் பக்கத்தில், ‘உத்தரப்பிரதேசத்தில் இதுவரை கொலை, திருட்டு, மோசடி, பலாத்காரம் உள்ளிட்டவை மூலம் குற்றவாளிகள் பாஜ அரசின் சட்டம்- ஒழுங்கைதான் பார்ட் பார்ட்டாக பிரித்து கொண்டிருந்தனர். தற்போது ஹெலிகாப்டரையும் பார்ட் பார்ட்டாக பிரித்து திருடி சென்றுள்ளனர். இது விமான நிலைய பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது’ என்று விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்த உ.பி போலீசார், ‘விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் திருடு போகவில்லை. எஸ்ஏஆர் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து மற்றொரு நிறுவனம் அந்த ஹெலிகாப்டரை வாங்கி டிரக்கில் கொண்டு செல்லும்போது திருடு போனதாக புகார் வந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

வரலாறு காணாத வறட்சியால் ஜிம்பாப்வேயில் யானைகளை கொன்று மக்களுக்கு உணவாக வழங்கத் திட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாணவியிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் கைது

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை