தமிழ்நாட்டில் 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், தென் தமிழகத்தை ஒட்டிய கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. சென்னையில் மதுரவாயல், வில்லிவாக்கம், அயனாவரம், செங்குன்றம், ஆவடி, மணலி, அண்ணாநகர்,பெரம்பூர், கோடம்பாக்கம், ராயபுரம், டிஜிபி அலுவலகம், மயிலாப்பூர், உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் 10மிமீ மழை பெய்துள்ளது.

இதற்கிடையே, கரூர் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், சேலம், திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இலங்கை மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. அதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 2 நாளுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை