கோவை காரமடையில் கடும் பனிப்பொழிவு: ஜாதி முல்லை பூச்செடிகள் கருகின


கோவை: காரமடையில்கடும் பனிப்பொழிவு காரணமாக ஜாதி முல்லை பூச்செடிகள் கருகியது. கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஜாதி முல்லை பூச்செடிகள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாலை நேரங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவால் பூச்செடிகள் கருகி வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஏற்படும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஜாதி முல்லை பூச்செடிகள் கருகும் தன்மை கொண்டது.

இந்த காலகட்டங்களில் பூக்களின் எடையும் குறைவாகவே இருக்கும். மாசி மாதத்தில் செடிகளில் தண்டுகளை மட்டும் விட்டு விட்டு, கிளைகளை வெட்டி விட்டு, களை எடுத்து உரம் போட்டால் 4 மாதங்களில் மீண்டும் செடிகள் தளைத்து பூக்கள் பூக்க ஆரம்பிக்கும். அப்போது, பூக்கள் எடை அதிகமாக இருக்கும். விலையும் ஓரளவிற்கு கிடைக்கும். வைகாசி மாதத்தில் இருந்து ஐப்பசி மாதம் வரை பூக்களை பறிக்கலாம் என்றனர்.

Related posts

தொழிலாளி கொலை வழக்கில் 8 பேர் கைது

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஐகோர்ட்டில் பொதுநல மனுத் தாக்கல்

குமரியில் கனமழை காரணமாக உப்பு விலை உயர்வு