கனமழை காரணமாக கர்நாடகாவில் நிலச்சரிவு: வாகனங்கள் சிக்கியது

ஹாசன்: கர்நாடகா முழுவதும் பெய்து வரும் கனமழையால் பல்வேறு மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. ஹாசன் மாவட்டத்தில் மங்களூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 75ல் ஷிராடி காட், எட்டினஹள்ளி, தொட்டதோப்பிள் ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. ஷிராடி காட்டில் கார், லாரி மற்றும் எரிவாயு டேங்கர் மீது பெரிய பாறாங்கற்கள் விழுந்ததன.

இதனால், பல மணி நேரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து சகதிகளை அகற்றும் பணியை தொடங்கினர். இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்று புத்தூர் – சம்பாஜே வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், சீரமைக்கும் பணி நடைபெற்றது. இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்