டெல்டாவில் கனமழை: 2.10 லட்சம் மீனவர்கள் முடக்கம்

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நாகை, வேதாரண்யம், வேளாங்கண்ணி, திருக்குவளை, திருமருகல், கீழ்வேளூர், மயிலாடுதுறை, கொள்ளிடம், சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி, ஆலங்குடி, மணமேல்குடி, சமயபுரம், மணப்பாறை, துவரங்குறிச்சி, துவாக்குடி, திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மாலை முதல் விடிய விடிய மழை பெய்தது. கனமழையால் டெல்டாவில் 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். வேதாரண்யத்தில் மழைக்கால விற்பனைக்காக சேமித்து வைத்துள்ள 1 லட்சம் டன் உப்பை, பனை ஓலைகள் மற்றும் தார்பாய்களை கொண்டு தொழிலாளர்கள் பத்திரமாக மூடிவைத்துள்ளனர்.

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை