டெல்லியில் கனமழை: சாலைகளில் வெள்ளம்

டெல்லி: டெல்லியில் அதிகாலையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லி சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். டெல்லி பிகாஜி காமா பகுதி, நவ்ரோஜி நகர், சாந்திபாதை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. டெல்லி மலாய் மந்தி, சர்தார் பட்டேல் மார்க், ஜன்பத் சாலை உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது. டெல்லி துவாரகாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கட்டடம் இடிந்து விழுந்து பெண் பஉயிரிழந்தார். 8 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனிடையே டெல்லியில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு