கனமழை எதிரொலி: தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நீலகிரி: கனமழை எதிரொலியாக நீலகிரியில் இன்று 4 வட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வருகிற 23ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேப்போன்று நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு

பாலியல் புகாருக்குள்ளான டாக்டர் சுப்பையா மீதான வழக்கில் தனி நீதிபதி உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு