கனமழை, பலத்த காற்று எதிரொலி: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

நீலகிரி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை தீவிரத்தால் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வந்தது. மழையுடன் இடைவிடாமல் சூறாவளி காற்று வீசியதால் மஞ்சூர், கிண்ணக்கொரை, கோரகுந்தா, அப்பர்பவானி, குந்தாபாலம், தங்காடு உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. வீடுகள் இடிந்ததுடன் மண் சரிவுகள் ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் பிற்பகல் முதல் மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்த நிலையில் நேற்று காலை முதல் மழை பெய்வது முற்றிலுமாக நின்று போனது. அவ்வப்போது வெயிலும் தலை காட்டியது. ஆனால் சூறாவளி காற்றின் தாக்கம் அதிகரித்தது. இடைவிடாமல் பலத்த காற்று வீசி வருகிறது. அவ்வப்போது சில பகுதிகளில் மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கனமழை பெய்து வருவதால், நீலகிரியில் உள்ள 4 வட்டங்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிவிப்பில், இன்று 22.07.2024 நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தில் மாணவ மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Related posts

செங்கல்பட்டு அருகே ரசாயனம் கலந்த 200 விநாயகர் சிலைகள் பறிமுதல்

தியாகிகளின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்வு; அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு