தமிழ்நாட்டில் 2 நாட்கள் மிக கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ,மீ வரை மழை பெய்யக்கூடும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் ஜுன் 24, 25, 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைய உள்ளது. அதிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய அதிகளவில் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 26 வரை மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

அதில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், 25-ம் தேதி தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, பகுதிகளிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related posts

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது அக்னி வீர் திட்டம் நீக்கப்படும்: மக்களவையில் அகிலேஷ் யாதவ் உரை

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 27 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

அதிமுக ஆட்சியில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மா உணவக ஊழியர்களுக்கான ஊதியம் ரூ.325 ஆக உயர்வு!!