கனமழை முன்னெச்சரிக்கை: புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 200 கனஅடி உபரிநீர் திறப்பு

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக புழல் ஏரியில் இருந்து முதற்கட்டமாக வினாடிக்கு 200 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. சேனைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரியானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 3300மில்லியன் கன கொள்ளளவு கொண்ட புழல் ஏரியானது. கிருஷ்ணா நீர்வரத்து மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக நிரம்பியது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சுழலில் புழல் ஏரியானது வேகமாக நிரம்பி வருகிறது.

3300மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த புழல் ஏரி 2896 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட ஏரியில் தற்போது 19.42 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு நீர்வரத்து 570 கனஅடியாகவும், சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக இருக்க கூடிய சுழலில் கடலோர மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழைகான வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக டிசம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது புழல் ஏரியிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதற்கட்டமாக வினாடிக்கு 200 கன அடி உபரி நீரை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றக்கூடிய 2 ஷட்டர்களில் ஒரு ஷட்டர் வழியாக உபரி நீர் வெளியேற்றபட்டுள்ளது. இங்கிருந்து 13அரை கிலோ மீட்டர் தூரம் சென்று எண்ணூர் கடலில் கலக்கும்.

எண்ணூர் கடலுக்கு செல்லக்கூடிய இந்த புழல் ஏரியின் உபரி நீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கக்கூடிய நார்வாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், சாமியார்மடம், பாபா நகர், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட 10கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் பிரபு ஷங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் புழல் ஏரியின் உபரி நீர் கால்வாயில் யாரும் பொதுமக்கள் வேடிக்கை பார்ப்பது, செல்பி எடுப்பது, குளிப்பது, துணி துவைப்பது போன்ற எந்த விதமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்ற எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. பருவமழை காரணமாக புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்த உபரிநீர் திறப்பானது மேலும் அதிகரிக்கபடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

வங்கக்கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு