தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை நகரில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:
02.10.2024 மற்றும் 03.10.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

அரபிக்கடல் பகுதிகள்:
01.10.2024: கேரளா கடலோரப்பகுதிகள், லட்சதீவு மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related posts

நேர்மை, எளிமைக்கு எடுத்துக்காட்டு காமராஜர்: இபிஎஸ் புகழாரம்

பீகாரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாஃபர்பூர் பகுதியில் விழுந்து நொறுங்கியது..!!

சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு: 20,000 ஆசிரியர்கள் பாதிப்பு!!