தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 40 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்தும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.