பாகிஸ்தானில் வெப்ப அலை: 4 நாளில் 450 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானில் கடும் வெப்ப அலைக்கு 450 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக 40 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது.மிக பெரிய துறைமுக நகரான கராச்சியில் வெப்பத்தால் பாதிக்கப்பட்டு 450 பேர் உயிரிழந்துள்ளனர் என பொது நல அமைப்பு தெரிவித்துள்ளது. எதி அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி கூறுகையில்,கராச்சியில் கடந்த 4 நாட்களில் 427 உடல்களை அறக்கட்டளை மீட்டுள்ளது. மின் வெட்டு அதிகமாக உள்ள இடங்களில் இருந்து தான் பெரும்பாலான உடல்கள் வந்துள்ளன. வீடுகள் இல்லாதோர், போதை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.

Related posts

சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமம் ரத்து: ஒருவர் கைது

பெண் டாக்டர் தற்கொலை

டேங்கர் லாரியில் இருந்து திருடப்பட்ட 18,400 லிட்டர் டீசல் பறிமுதல்