முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருவதால் பிற்பகல் ஆர்டரை தவிர்க்க வேண்டும்: வாடிக்கையாளர்களிடம் சொமேட்டோ வேண்டுகோள்

சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் பிற்பகல் நேரங்களில் ஆர்டர் செய்வதை தவிர்க்குமாறு தங்களது வாடிக்கையாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அவசியம் இருந்தால் மட்டும் இந்த நேரத்தில் ஆர்டர் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. சென்னை, டெல்லி, மும்பை என இந்தியாவின் முக்கிய நகரங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்தச் சூழலில் சொமேட்டோ பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது. தயவு செய்து வெயில் உச்சத்தில் இருக்கும் மதிய நேரத்தில் ஆர்டர் செய்வதைத் தவிர்க்கவும் என சொமேட்டோ தெரிவித்தது. அந்த பதிவுக்கு இணையதள பயனர்கள் மற்றும் சொமேட்டோ வாடிக்கையாளர்கள் இதற்கு கலவையான கமெண்ட்களை வழங்கி வருகின்றனர்.

“உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஆர்டரை தவிர்ப்பது நல்லதல்ல. இது சிறந்த யோசனையும் அல்ல. அதற்கு பதிலாக டெலிவரி பணியில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகளை வெப்ப அலையில் இருந்து காப்பது குறித்து மாற்று வழியில் யோசிக்கலாம்”, “உங்களுக்கு ஊழியர்கள் மீது அக்கறை இருந்தால் எங்களது சேவை மதிய நேரங்களில் இல்லை என பதிவு போடுங்கள்”, “அப்படி என்றால் நான் உங்களது செயலியை டெலிட் செய்கிறேன்”. “உணவு டெலிவரி நிறுவனங்களை நம்பி இருக்கும் நபர்களுக்கு இது சாத்தியமே இல்லை” என பயனர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு