உலகளவில் கோராதாண்டவத்தை காட்டிவரும் வெப்ப அலை: ஸ்பெயினில் காட்டுத் தீ; இத்தாலியில் சிவப்பு எச்சரிக்கை

அமெரிக்காவின் மிக பெரிய தேசிய பூங்காவான கலிபோர்னியாவில் உள்ள மரணப் பள்ளதாக்கு கோடை காலத்தில் தகிக்கு வெப்பத்திற்கு பெயர்பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் வெப்பத்தின் அலவு புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் தற்போது 56 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை எட்டியுள்ளது.வெப்பத்தின் புதிய உச்சத்தை அனுபவிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகள் உலைக்கு நிகரான வெப்பம் உள்ளதாக கூறுகின்றனர்.

அரிசோனா மாகாணத் தலைநகர் பீனிக்ஸ் நகரில் கடந்த 46 நாட்களாக தொடர்ந்து 40 டிகிரிக்கு மேலாக வெப்பம் பதிவாகிவருகிறது. கனடாவில் வெப்ப அலை காரணமாக 2.47 கோடி ஏக்கர்பரப்பளவிலான நிலங்கள் காட்டுதீக்கு இரையாகியுள்ளது. இது ஐஸ்லாந்து நாட்டின் ஒட்டுமொத்த பரப்பளவுக்கு இணையானது என கூறபடுகிறது.

பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரில் 45 நிமிடங்களில் 18 செ.மீ மழை கொட்டியதால் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. ஐரோப்பிய நாடான ஸ்பெயின் நாட்டில் வெப்ப அலையின் தக்கத்தால் 44 டிகிரி செல்சியஸை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதன் தக்கத்தால் கேனரி தீவுகளில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் வனபகுதி தீக்கிரையானது கட்டுகடங்காமல் பரவிய காட்டு தீ காரணமாக 4ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிகாப்பான இடங்களுக்கு அப்புறபடுத்தபட்டனர்.

இதே போல், அருகில் உள்ள இத்தாலியிலும் ரோம், புலோரன்ஸ் உள்ளிட்ட 16 நகரங்களுக்கு வெப்ப அலை காரணமக சிவப்பு எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் வானிலை ஆய்வு மையம் பல்வேறு நகரங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கையை வழங்கியுள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம் அதனால் ஏற்படும் வறட்சியால் பிரான்ஸ் நாட்டின் வேளாண்மை பெருமளவு பாதிப்புக்குள்ளாகும் என அஞ்சபடுகிறது. சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் எரியும் மலைகள் என அலைக்கபடும், ஃபிலேனிங் மவுன்டைன் மலைபகுதியில் வெயில்தகித்து வருகிறது.

அதீத வெப்பத்தின் காரணமாக நிலபரப்பு வெப்பநிலை 80 டிகிரி செல்ஸியை தாண்டியுள்ளதால், நிலத்தில் இருந்து வெப்பம் வெளியேறுவது கண்களுக்கு புலப்படுகிறது. பெயருக்கு ஏற்றவாறு எரியும் மலைகளில் தகிக்கும் வெப்பத்தால் மலைகள் எரிவதாக சுற்றுலாபயணிகள் தெரிவிக்கின்றன. சீனாவின் வடமேற்கு பகுதியில் வெயில் கொளுத்தில் வரும் அதே நேரத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள குவாங்டாங் மாகாணத்தில் உள்ள சோன்ஜியாங் நகரில் புயல் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. தைஃபூன் ஆக மாறியுள்ள கலிம் புயல் குவாங்டாங் மற்றும் ஹைனானுக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்