இதயத்தை பயன்படுத்துங்கள், இதயத்தை அறிந்து கொள்ளுங்கள்: டாக்டர். அஜித் முல்லாசாரி எஸ் இதயவியல் துறை இயக்குநர்

இதய நோய் மற்றும் இதய அறுவை சிகிச்சையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தி மெட்ராஸ் மெடிக்கல் மிஷனின் ஒரு பிரிவான, இதய நோய்கள் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் தென்னிந்திய பிராந்தியத்தில் மாரடைப்பு மற்றும் இதய அறுவை சிகிச்சைக்கான மூன்றாம் நிலை பராமரிப்பு மையமாக விளங்குகிறது. இந்தாண்டுக்கான உலக இதய நாள் முழக்கம் “இதயத்தை பயன்படுத்துங்கள், இதயத்தை அறிந்து கொள்ளுங்கள்’’ என்பதாகும். உலக இதய நோய்களின் தலைநகராக இந்தியா உள்ளது. வந்த பிறகு சிகிச்சை என்பதற்கு பதிலாக, வரும் முன் காப்போம். அதிலும் முதியோருக்கான இதய நோய்கள் வராமல் தடுப்பது என்பதே தற்போதைய தேவையாகும்.

இந்தியாவில் உள்ள இளம் தலைமுறையினரிடம் கரோனரி தமனி நோய் பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நோய் தொற்றில் இருந்து விடுபட ரத்தத்தில் சர்க்கரை அளவை சோதித்தல், உடற்பயிற்சி, புகைத்தல் மற்றும் குடிபழக்கத்தை கைவிடுதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த உலக இதய தினத்தில், இதய நோய்களில் இருந்து விடுபட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சி மேற்கொண்டு ஆரோக்கியமான இதய துடிப்பு நிறைந்த உலகை உருவாக்குவோம். இன்றைய சிறிய மாற்றங்கள் நாளைய ஆரோக்கியமான இதயத்துக்கு வழி காட்டியாகும்.

Related posts

இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!