செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 1-க்கு ஒத்திவைப்பு!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 1க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தொடர்ந்த புதிய மனுக்களை ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரியும், மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக்கோரியும் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்திருந்தார். சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

கைதாகி ஓராண்டாகியும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 40வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த 19வது முறை உத்தரவிட்டது. நீதிமன்ற காவல் ஜூன் 25-ம் தேதி இன்று வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை, 41வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆலோசனை கூட்டம்: கார்ப்பரேட் வர்த்தகத்தை அரசுகள் தடை செய்யவேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்

செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு