ஆரோக்கியமான கூந்தலுக்கு அகில்!

*கோடைகாலம் வந்துவிட்டாலே கூந்தல் ஆரோக்கியம்தான் முதலில் கேள்விக்குறியாகும். இதோ சில கேஷத்திற்கான டிப்ஸ்.
*நெல்லிக்காய் ஒரு கை நிறைய எடுத்து, ஒரு கப் பாலில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பிறகு அதை அரைத்து கூழாக்கி தலையில் நன்கு தேய்த்து பிறகு சிறிது நேரம் கழித்து நன்கு தேய்த்து சுத்தப்படுத்துங்கள்.
*கையேனி இலை, மருதாணி இலை இரண்டையும் நன்கு அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொண்டு அதை 250 மில்லி தேங்காய் எண்ணெயில் கலக்கி வைத்து அதனுடன் செம்பருத்தி பூ, இரட்டி மதுரம் போன்றவற்றை சிறிது காய்ச்சவும். காய்ச்சிய எண்ணெயை தினமும் கூந்தலில் தேய்த்து வந்தால் அடர்த்தியாக கூந்தல் வளரும்.
*கெட்டியான தேங்காய்ப் பாலை எடுத்து அதில் எலுமிச்சை பழச்சாறு கலந்து தலையில் நன்கு தேயுங்கள். அரைமணி நேரம் கழித்து செம்பருத்தி கூழ் கலந்து தலையை கழுவுங்கள். இதை செய்தால் தலையில் உள்ள பொடுகு நீங்கும்.
*வாரத்தில் இரண்டு நாட்கள் தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து தலையை சுத்தமாக கழுவி விடுங்கள்.

*மருதாணி பூவை இடித்து தேங்காய் எண்ணெயில் கலந்து அதை காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் கூந்தல் நன்கு வளரும். நரை மறையும்.
*அகில், சந்தனம், குந்திலிங்கம் இவற்றின் புகையில் கூந்தலை உலரவைத்தால் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் ஈறு, பேன்போன்றவை மறையும்.
*பெண்களுக்கு முடி உதிர்கிறது என்றால் அவர்களுக்கு சத்து குறைபாடு, உடல் ஆரோக்கியம் குறைவு உள்ளது என்பது தான். உடலில் ரத்த அளவு குறைந்தாலும் முடி உதிர்வது அதிகமாகும். பெண்களே… நன்கு உடலை கவனியுங்கள். உங்கள் கூந்தல் நீங்கள் நினைத்ததுபோல் வளரும்.
– காகை ஜெ. ரவிக்குமார்

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு