ஆரோக்கியமான உடல்நிலையை யார்தான் வேண்டாம் என்போம். அதற்குதான் உதவுகிறது இந்த ஹெல்திஃபைமி செயலி (Healthifyme). ஒரே செயலியில் நிபுணர்களின் உடற்பயிற்சிகள், ஆலோசனைகள், யாருக்கு என்ன டயட், என்ன உணவு எப்படி எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும். உடல் குறைப்பு துவங்கி, வலிமை பெறுவது என அனைத்திற்கும் ஒரே இடமாக இந்தச் செயலி பயன்படுகிறது. தக்க நேரத்தில் எவ்வளவு கலோரி தேவை, எவ்வளவு கலோரி நம் உண்ணும் உணவில் உள்ளன எனப் புகைப்படம் மூலம் காட்டுவது என அனைத்து வசதிகளும் ஓரிடத்தில் பெறலாம்.மேலும் நம்மில் பலரும் தண்ணீர் சரியான அளவில் குடிப்பதில்லை, இதனாலேயே சிறுநீரகப் பிரச்னைகள் துவங்கி பல உபாதைகள் உடலில் உண்டாகின்றன. அதற்கும் இந்தச் செயலி அலாரத்துடன் தண்ணீர் குடிக்க உதவுகிறது.
ஹெல்திஃபைமீ!
previous post