உடல்நிலை காரணமாக பரூக் அப்துல்லா தேர்தலில் போட்டியில்லை: உமர் அப்துல்லா தகவல்

நகர்: தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா(86). தற்போது ஸ்ரீநகர் எம்பியாக உள்ள பரூக் அப்துல்லா இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என உமர் அப்துல்லா கூறினார். உடல் நிலை காரணங்களால் அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார். கட்சியின் பொது செயலாளர் அலி முகமது சாகர் மற்றும் கட்சியின் உறுப்பினர்களின் அனுமதியுடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக உமர் அப்துல்லா தெரிவித்தார். கடந்த 2002 காஷ்மீர் பேரவை தேர்தலில் உமர் அப்துல்லா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பரூக் அப்துல்லா மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 2009ல் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பரூக் அப்துல்லா மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகவும் பதவி வகித்தார். 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு பிடிபி கட்சியின் நசீர் அகமது கானிடம் தோல்வியுற்றார். 2017ல் ஸ்ரீநகர் மக்களவை தொகுதி இடைதேர்தலில் வெற்றி பெற்ற பரூக் அப்துல்லா, 2019 ல் நடந்த தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றார்.

Related posts

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்