ஹெட்போன், இயர்போன் எச்சரிக்கை!

நன்றி குங்குமம் தோழி

மக்களிடையே ஹெட்போன், இயர்போன் பயன்படுத்துவது பெருகிக் கொண்டே வருகிறது. அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்தினால் அதனால் வரும் தீமைகளிலிருந்து விடுபடலாம்.போனில் பேசும்போதே, பலபேர் காதுலே ஹெட்போனை மாட்டிண்டு செல்போன்லே பேசுகிறார்கள். ஹெட்போன், இயர்போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதில் நிறைய பேர் அடிமையாக உள்ளார்கள். சிலர் தூங்கும்போதுகூட காதில் இதனை மாட்டிண்டு தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

நமது நடு காதுலே ‘ெஹட்போன் அல்லது இயர்போன்’ மொட்டுகளை நெருக்கமாகப் பொருத்திக்கொண்டு, தொடர்ந்து தொடர்ந்து இயர்போனை பயன்படுத்தினால், நம் காதுகள் கேட்கும் திறனை கொஞ்சம், கொஞ்சமாக இழந்து விடும் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். ஒரு ஜெட் இஞ்சின் சத்தத்துக்கு இணையானது ‘ஹெட்போன் சத்தம்’ என ஆய்வு முடிவுகள் சொல்கிறது.சண்டிகரில் உள்ள ஒரு ஆய்வு நிறுவனம், சில ஆண்டுகளாக இது குறித்து ஆய்வு செய்ததில், தினமும் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொடர்ந்து மொபைல், ஹெட்போன், இயர்போன் உபயோகிப்பவர்களில் 100 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அவர்களில் 80 பேர் நிரந்தர காது கேளாமை நிலைக்கு எதிர்காலத்தில் தள்ளப்படும் சூழ்நிலை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

மணிக்கணக்கில் மொபைலில் பேசுதல், ஹெட்போன், இயர்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ‘ஸ்பீக்கர்’ போட்டுப் பேசினால் காதுகளுக்கு எந்தவித கெடுதலும் கிடையாது. குறிப்பாக குழந்தைகளிடம் மொபைல் போன், ெஹட்போன், இயர்போன் தந்து பழக்கப்படுத்தக் கூடாது. இது குழந்தைகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தீங்காகும்.தொடர்ந்து அதிக நேரம் மொபைலில் பேசுபவர்கள், ஹெட்போன், இயர் போனில் கேட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நாளடைவில் தலைவலி, கவனக்குறைவு, ஞாபக சக்தி குறைவு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. எந்த உடல் உறுப்பும், அதன் செயலை இழப்பதற்கு முன் எச்சரிக்கையுடன் கையாண்டால் நலமுடன் வாழலாம்.

தொகுப்பு: அ.திவ்யா, காஞ்சிபுரம்.

Related posts

மஞ்சள் இயற்கை 360°

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்… காத்திருக்கும் ஆபத்துகள்!

நலம் தரும் நவதானியங்கள்!