தனக்கு தலைவலி கொடுக்கும் இருவரை கட்சியில் சேர்க்காமலிருக்க அடுக்கடுக்கான திட்டம் வச்சிருக்கும் சேலத்துக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘டெல்டாவில் சின்னமம்மியின் சகோதரரை ரகசியமாக கண்காணிக்கும் பணியில் சேலத்துக்காரர் டீம் ஈடுபட்டிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மனுநீதி சோழன் மாவட்டத்தை சேர்ந்த சின்னமம்மியின் சகோதரர், டெல்டா மாவட்டத்தில் உள்ள இலை கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் தற்போது வரை தொடர்பில் இருந்து வருகிறாராம்… இவர் மூலம் தான், இலை கட்சியில் சின்னமம்மியை மீண்டும் சேர்க்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் சிலர் போர்க்கொடி தூக்குகின்றனராம்.. இதனால் இவரது நடவடிக்கையை தீவிரமாக கண்காணிக்க சேலத்துக்காரர், அவரது டீமுக்கு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளாராம்..

தொடர்ந்து, சின்னமம்மியின் சகோதரரர் எங்கு செல்கிறார், யார் யாரிடம் தொடர்பில் உள்ளார் என்பது உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க சேலத்துக்காரர் அதிரடி உத்தரவிட்டுள்ளாராம்… இந்த உத்தரவை தொடர்ந்து சின்னமம்மியின் சகோதரரை ரகசியமாக கண்காணிக்கும் பணியில் சேலத்துக்காரர் டீம் ஈடுபட்டு இருக்காங்களாம்… குறிப்பாக, டெல்டாவை சேர்ந்த இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் நடவடிக்கைளையும் கண்காணிக்க தனியாக ‘டீம்’ அமைக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்… இதனால் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கிலியில் உள்ளார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி காட்டுவதால் குமரி பதிவுத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் இருக்காங்களாமே.. என்றார் பீட்டர் மாமா. ‘‘எஸ்கேப் ஆன புதுச்சேரி எம்எல்ஏவால் தொகுதி மக்கள் கடும் அப்செட்டில் இருக்காங்களாமே தெரியுமா…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் கடந்த ஜூன் மாதம் வீட்டில் கழிவறைக்கு சென்ற மாணவி உள்பட 3 பெண்கள் விஷவாயு தாக்கி பலியான சம்பவம் அனைவரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்குது.. அரசு இயந்திரங்கள் ஒரு மாதமாக அங்கு முகாமிட்டு பல்வேறு சீரமைப்பு பணியில் ஈடுபட்டது.

உயிரிழப்பு சம்பவம் நடந்தபோது ஓடிவந்த தொகுதி எம்எல்ஏவான சங்கரமானவரை அங்கு நுழைய விடாமல் தடுத்தாங்க… பலமுறை முறையிட்டும் செயல்படாத நீங்கள்… இப்போது ஏன் வந்தீர்கள்… என சரமாரி கேள்வி கேட்டதால் தர்மசங்கடத்திற்கு ஆளானார் வியாபாரிகளின் தலைமகனாக உலாவி வரும் எம்எல்ஏ. பின்னர் ஒரு வழியாக அங்கிருந்த அதிகாரிகள் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்த கதை ஒருபுறமிருக்க தொடர்ந்து அப்பகுதியில் அவ்வப்போது விஷவாயு கசியவே 3, 4 முறை விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டாங்க பொதுமக்கள்.. இதனால் வரும் சட்டசபை கூட்டத் தொடரில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்கும்…

தங்களது பிரச்னைக்கு எப்படியாவது நிரந்தர தீர்வு கிடைக்கும்னு மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தாங்க… ஆனால் தொகுதி எம்எல்ஏவான வியாபாரிகளின் தலைமகனோ, பாஜ அதிருப்தி கோஷ்டியுடன் இணைந்து செயல்பட்டு ஓரங்கப்பட்ட நிலையில் சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய முதல்நாளில் ஆஜராகி விட்டு, வெளிநாட்டுக்கு புல் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.. இதனால் அப்செட் ஆன தொகுதி மக்களோ தேர்தல் வரட்டும்… அப்புறம் வச்சுக்கிறோம்னு கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்களாம்.. இதுதான் புதுச்சேரியின் தற்போதைய ஹைலைட்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தனக்கு தலைவலி கொடுக்கும் ரெண்டு பேர் மட்டுமல்ல, எதிர்ப்பாளர்களையும் சமாளிக்க இலைக்கட்சி தலைவர் அடுக்கடுக்கான திட்டம் வச்சிருக்கிறதா அவரது அடிபொடிகள் பேசிக்கிறாங்களே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் 40 தொகுதியிலும் தோல்வியை கண்ட பிறகு ரொம்பவே அப்செட்டா இருந்தாரு.. வழக்கமாக தோல்வி ஏன் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை செய்வாங்க.. ஆனால் அதில் தனக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதால் அமைதியை கடைபிடிச்சாரு..

பின்னர் கட்சிக்காரர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் தொகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி சமரசம் செஞ்சாரு.. குறிப்பாக தேனிக்காரரையும், சின்ன மம்மியையும் கட்சியில் சேர்க்கவே கூடாதுன்னு சொல்லி நிர்வாகிகளை பேச வச்சாரு.. என்றாலும் 6 மாஜிக்கள், பிரிந்து கிடக்கும் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்பதில் உறுதியா இருக்காங்க.. அவர்களின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அறிவிச்சாரு..

ஆனால் அதில் பிரச்னை எழும்பினால் சமாளிக்க முடியாதுன்னு அவரது அடிப்பொடிகள் மூலமாக தெரிஞ்சிக்கிட்டாரு.. அந்த கோரிக்கையை பிசுபிசுக்க வைக்க என்ன செய்யலாம் என்ற யோசனையில், செயற்குழு கூட்டத்தை கூட்டிடலாம். இவ்வாறு கூட்டும்போது, கிளைக்கழக தேர்தல் நடத்த அனுமதி பெறுவதுடன், ரெண்டு பேரையும் கட்சியில் சேர்க்கவே கூடாதுன்னு ஒரு பெரும் தீர்மானத்தையும் கொண்டுவர முடிவு செஞ்சிருக்காரு.. இவ்வாறு அனுமதியை பெற்ற பிறகு, தனக்கு எதிராக இருக்கும் மாவட்டங்களில் தனக்கு ஆதரவு கொடுப்போருக்கு பதவியை கொடுத்து, அங்கு செல்வாக்கை கொண்டு வரப்போறாராம்..

அதன்பிறகு பொதுக்குழுவை கூட்டிடலாம் என்ற திட்டத்தையும் வச்சிருக்காராம்.. இதெல்லாம் அவரது எதிர்பாளர்களுக்கு தெரியாமல் செய்யமுடியுமா என்ற கேள்விக்கும் பிளான் வைச்சிருக்காராம்.. இலைக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பிடிக்க எங்கள் தலைவர் அருமையாக சட்டவிதிகளை மாற்றினார். 10 மா.செ. வழிமொழியணும், 10 மா.செ. முன்மொழியணும், 5 ஆண்டுகள் பொறுப்பில் இருக்க வேண்டும்னு அதிரடியாக மாற்றி, பொதுச்செயலாளர் ஆனாரு.. அதேபோல தனக்கு தலைவலி கொடுக்கும் ரெண்டு பேரையும் கட்சியில் சேர்க்க கூடாது என்பதற்காக எந்த எல்லைக்கும் தலைவர் போவாருன்னு அவரது அடிப்பொடிகள் உறுதிபட சொல்றாங்க..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்