பூந்தமல்லி அருகே பரபரப்பு கார் விபத்தில் சிக்கினார்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா. இவர், திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில், வேலூரில் நடந்த திமுக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு சென்று விட்டு காரில் சென்னை நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தார். பூந்தமல்லி -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து கார் இறங்கியது. அப்போது, முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டு நின்றது‌. வேகமாக வந்த மேயரின் கார் டிரைவரும் திடீரென பிரேக் பிடித்தார். இதில், பின்னால் வேகமாக வந்த லாரி மேயர் பிரியாவின் காரின் பின்னால் மோதியது. இதில் முன்னால் சென்ற காரின் மீது மேயரின் கார் மோதி நின்றது. மேயர் பிரியா இருந்த காரின் முன் மற்றும் பின் பகுதிகள் நொறுங்கி சேதம் அடைந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த மேயர் பிரியா அலறினார். மேலும் விபத்தை பார்த்ததும் அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மேயர் பிரியாவை காரில் இருந்து பத்திரமாக மீட்டனர். விபத்தில் மேயரின் காரை ஓட்டி வந்த டிரைவர் காயமடைந்தார். மேயர் பிரியா சிறிது நேரம் அங்கே நின்ற நிலையில் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமிக்கு சொந்தமான கார் வந்தது. அந்த காரில் ஏறி அவர் உடனடியாக வீட்டிற்கு சென்றார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்