யாத்திரையில் கேஜிஎப்-2 பாடல் விவகாரம் ராகுல் மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

பெங்களூரு: ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில், கேஜிஎப்-2 பாடல் பயன்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா விசாரித்து வந்தார்.. அப்போது நீதிபதி, இந்த வழக்கை ஏற்கனவே விசாரிக்க தடை உத்தரவை ஒரு வாரம் நீட்டித்து உத்தரவிட்டோம்.மேலும், தடை உத்தரவை நீட்டிக்க மாட்டோம் என கூறியிருந்தார்.

இதையடுத்து அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு, பதிப்புரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் யஷ்வந்த்பூர் காவல் நிலையத்தில் ராகுல் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆருக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டது.

Related posts

செனாப் பள்ளத்தாக்கில் அமித் ஷா பிரசாரம்; ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு