ரூ.38.58 லட்சம் ஹவாலா பணம் கடத்தியவர் கைது

பாலக்காடு: கேரள-தமிழக எல்லையில் கோவையையொட்டி கேரளாவில் உள்ள வாளையாரில் கலால் துறை காவலர்கள் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு பஸ்சை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். இதில் ஒரு பயணியின் பையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் 38.58 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

விசாரணையில் அவர் பாலக்காட்டை சேர்ந்த தாஜூதீன்(41) என்பதும் கோவையிலிருந்து மலப்புரத்திற்கு வியாபார விஷயமாக உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து தாஜூதீனை கைது செய்து பணத்தை பறிமுதல் செய்து சுங்கவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்